Rock Fort Times
Online News

பச்சை நிற பால் பாக்கெட் வருகிற 25-ம் தேதி முதல் நிறுத்தம் : ஆவின் நிர்வாகம் முடிவு..

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் லிட்டர் பால்,  ஆவின் மூலம் வினியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் 14.75 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது. ஆவின் நிர்வாகம் 4 வகையான   பால் பாக்கெட்டுகளை வினியோகம் செய்கிறது. இதனிடையே பச்சை நிற பால் பாக்கெட் லிட்டர் ரூ.44க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 4.5 கொழுப்பு சத்துள்ள பாலை லிட்டர் ரூ.44க்கு விற்பதால் ஆவின் நிறுவனத்துக்கு நஷ்டம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் வெளிமாநிலங்களில் இருந்து வெண்ணை, பால் பவுடர், ஆகியவற்றை அதிக விலைக்கு வாங்கி குறைந்த விலையில் பச்சை நிற பால் பாக்கெட் வினியோகம் செய்யப்படுவதால் அதிக வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதனால் பச்சை நிற பால் பாக்கெட் வினியோகத்தை ஆவின் படிப்படியாக குறைத்து வருகிறது. இந்நிலையில் செலவினங்களை குறைக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பச்சை நிற பால் பாக்கெட்  சில்லரை விற்பனை   வருகிற 25ம் தேதி முதல் நிறுத்தப்படுகிறது. அட்டைதாரர்களுக்கு டிசம்பர் 15ம் தேதி வரை பச்சை நிற பால் பாக்கெட் வழங்கப்படும் என ஆவின் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்