Rock Fort Times
Online News

திருச்சிக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட நட்சத்திர ஆமைகள் பறிமுதல்…!

கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு விமானம் ஒன்று வந்தடைந்தது. அதில் வந்த பயணிகள் மற்றும் அவர்களது உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணி ஒருவர், தனது உடைமையில் மறைத்து 403 நட்சத்திர ஆமைகளை கடத்தி வந்தது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த நட்சத்திர ஆமைகளை எதற்காக திருச்சிக்கு கடத்தி வந்தார் என்பது குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட நட்சத்திர ஆமைகள் வன விலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்