திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்… * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்!
தமிழ்நாடு அரசின் திட்டங்கள் ஒவ்வொரு இல்லங்களுக்கும் சென்றடையும் வகையில் “உங்களுடன் ஸ்டாலின்” என்னும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி உள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் ஆங்காங்கே முகாம்கள் நடத்தப்படுகின்றன.இந்த முகாம்களில் பொதுமக்கள் தங்களது குறைகளையும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் விடுபட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 17, 18 ஆகிய வார்டுகளில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம் ஈ.பி ரோடு விறகுப்பேட்டை அருகில் நடைபெற்றது. முகாமினை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். பின்னர் அவர் முகாமில் உள்ள 16 துறைகளான மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, மாற்றுத்திறனாளிகள் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, எரிசக்தி துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை ஆகிய துறைகளின் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாமில் நகராட்சி சொத்து வரி பெயர் மாற்றத்திற்கு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு பெயர் மாற்றம் செய்து கொடுக்கப்பட்டது . வருவாய்த்துறையில் பட்டா வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக பட்டா வழங்கப்பட்டது. அமைச்சருடன் திருச்சி கிழக்கு மாநகர செயலாளரும், மாநகராட்சி மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன், மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, மாவட்ட வருவாய் அதிகாரி பாலாஜி, வருவாய் கோட்ட அலுவலர் அருள், மாநகராட்சி உதவி ஆணையர் சாலை தவவளவன், செயற்பொறியாளர் இப்ராஹிம், மண்டல குழு தலைவர் ஜெய நிர்மலா, மாமன்ற உறுப்பினர்கள் பிரபாகரன், சண்முகப்பிரியா, வட்டக் கழகச் செயலாளர்கள் மனோகர், சுப்பிரமணி, சிலம்பரசன், பாண்டியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments are closed.