Rock Fort Times
Online News

மதுபோதையில் இருந்த எஸ்.எஸ்.ஐ., பணியில் மெத்தனமாக இருந்த காவலர் சஸ்பெண்ட் – திருச்சி சிட்டி கமிஷனர் காமினி ஐபிஎஸ் அதிரடி…!

திருச்சி மாநகரம், ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் தமிழரசன். இவர், நேற்று இரவு பணியின்போது மது போதையில் இருந்துள்ளார். அதேபோல, இதே காவல் நிலையத்தில் பணியாற்றும் மணிகண்டன் என்கிற காவலர் பணிக்கு வராமல் மெத்தனமாக இருந்துள்ளார்.
இதுகுறித்த தகவலின்பேரில் விசாரணை நடத்திய திருச்சி சிட்டி கமிஷனர் காமினி ஐபிஎஸ், தமிழரசன், மணிகண்டன் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளார்.சிறப்பு உதவி ஆய்வாளரும், காவலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் திருச்சி காவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்