ஸ்ரீரங்கம் : பெரியார் சிலையை தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்தவர் பிடிபட்டார்…
சிலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு...
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ராஜகோபுரம் முன்பாக பெரியார் சிலை ஒன்று நிறுவப்பட்டு உள்ளது. கோபுரம் அருகே உள்ள இந்த சிலையை அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்தநிலையில், ராஜகோபுரம் அருகே அமைக்கப்பட்டுள்ள பெரியார் சிலையை தகர்க்கப் போவதாக ஒருவர் சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் என். காமினி ஐபிஎஸ் , துணை போலீஸ் கமிஷனர் அன்பு உள்ளிட்டோர் சம்பவ இடம் விரைந்து சென்று பார்வையிட்டனர். ஆனால், சிலைக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பின்னர் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சர்ச்சைக்குரிய பதிவினை ராமநாதபுரம் திருவாடனை பகுதியைச் சேர்ந்த பரணி என்பவர் பதிவிட்டது தெரியவந்தது. இதையடுத்து அவாிடம் ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மிரட்டலால் பெரியார் சிலைக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.