ஸ்ரீரங்கத்தில் தமிழ்நாடு அரசு இந்துசமய அறநிலையத்துறை ஆளுகையின் கீழ் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயில் பெயரை சொல்லி தனிநபர்கள் பக்தர்களிடம் தரிசனத்திற்காகவோ, ஏனைய சேவைகளுக்காகவோ வலைதளங்கள், சங்கங்கள், அமைப்புகள் மூலமாக பணம், பொருள் வசூலிப்பதாக கோவில் நிர்வாகத்திற்கு தகவல் வந்தது. இந்நிலையில் கோவில் முன்பு கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில் கோவிலுக்காக பணம் வசூலித்தால் காவல்துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். இத்திருக்கோயிலுக்கு நன்கொடை வழங்க விரும்புவோர் இக்கோயிலின் அதிகாரபூர்வ இணையதளம் srirangamranganathar.hrce.tn.gov.in மூலமாகவோ அல்லது திருக்கோயில் அலுவலகத்தை நேரடியாகவோ தொடர்புகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அலுவலக தொடர்பு எண் : 0431 – 2432246. இவ்வாறு திருக்கோயில் நிர்வாகம் அந்த அறிவிப்பில் தொிவித்துள்ளது.