108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோவிலில் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கைகளை மாதம்தோறும் உண்டியலை திறந்து எண்ணுவது வழக்கம். இந்த மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கருட மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் செ.மாரியப்பன் முன்னிலையில் நடைபெற்றது. இதில் ரூ 85,09,827 ரொக்கமும், 203 கிராம் தங்கமும், 599 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணம் 293-ம் இருந்தது. இந்த உண்டியல் எண்ணும் பணியில் கோவில் ஊழியர்கள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


Comments are closed, but trackbacks and pingbacks are open.