Rock Fort Times
Online News

ரங்கா ரங்கா பக்தி கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கத்தில் சித்திரை தேரோட்டம்!

  108 வைணவ  திருத்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சித்திரை தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் விருப்பன் திருநாள் எனப்படும் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 11 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 21-ந்தேதி வரை 11 தினங்கள் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் நம்பெருமாள் கற்பக விருட்ச வாகனம், சிம்ம வாகனம், யாளி வாகனம், இரட்டை பிரபை வாகனம், கருடவாகனம் என பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதித்தார்.17 ம் தேதி நெல்லளவு கண்டருளினார்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதற்காக நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு 4.30 மணிக்கு சித்திரை தேர் மண்டபம் வந்தடைந்தார். பின்னர் 4.45 மணிக்கு நம்பெருமாள் திருத்தேரில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளுக்கு பின் காலை 6 மணிக்கு அங்கு கூடியிருந்த பக்தர்கள் ரங்கா ரங்கா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். சித்திரை வீதிகளில் தேர் உலா வந்து நிலையை வந்தடைந்தது. நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்