Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் அனுமன் சிலை நகர்த்தி வைப்பு: அடியார்கள் போராட்டம் …!

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கொடிமரம் முன்பு 3 ஆயிரம் ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருந்த அனுமன் சிலை நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சிலையை மீண்டும் பழைய இடத்திலேயே வைக்க கோரியும், மூலவர் ரெங்கநாதர் பாதத்தை சீரமைக்க வலியுறுத்தியும் ஸ்ரீ ராமானுஜ திருமால் அடியார்கள் குலாம் சார்பில் கோவிலின் உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், விருதுநகர், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆண்கள், பெண்கள் என 500க்கும் மேற்பட்டோர் ஜால்ரா வாசித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக அவர்களை உள்ளே விட கோவில் நிர்வாகத்தினர் தடுத்ததால் தள்ளுமுள்ளு, வாக்குவாதம் ஏற்பட்டது.

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்