திருச்சி மாநகரில் மிகவும் சென்சேஷனல் காவல் நிலையங்களில் ஒன்றாக ஶ்ரீரங்கம் மாறிவருகிறது. இதனால் தான் ஶ்ரீரங்கம் காவல்நிலையத்திற்கு மட்டும் இரண்டு ஐ.எஸ் – காவலர்கள் பணி செய்கிறார்கள். ஒருவர் சட்டம், ஒழுங்கு மற்றும் குற்ற நடவடிக்கைகளை கண்காணிக்கிறார். மற்றொருவர் ஶ்ரீரங்கம் கோவில் தொடர்பான பணிகளை மேற்க்கொள்கிறார். ஶ்ரீரங்கம் கோவிலுக்கான ஐ.எஸ் காவலரான திருஞானம் என்பவர் தான் ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர் என்பதை மறந்து, சீஃப் செக்கரட்டரி ரேஞ்சுக்கு, திருக்கோவில் வளாகத்தில் சீன்போட்டு வருகிறாராம். கோவில் பணியாளர்களை அதிகாரம் செய்வது, சுவாமி தரிசனம் செய்யவரும் அப்பாவி பக்தர்களை அங்கே நிற்காதே, இங்கே நில் என எல்லோர் முன்னிலையிலும் வெட்டி பந்தா செய்வது, தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு விரைவு தரிசனத்திற்கு வழிவகை செய்வது என ஆட்டமாய் ஆடுகிறாராம். திருஞானம் வந்தால் சிறப்பு தரிசன கேட் உடனே திறக்கவேண்டும், இல்லையென்றால், உன்னைய எப்படி பார்த்துக்கனுமோ அப்படி பார்த்துக்கிறேன் ஏதாவது கேசில் மாட்டாமலா போவாய், அப்போ உன்னை என்ன செய்கிறேன் பார் என எல்லோரையும் மிரட்டி பணிய வைக்கும் மனப்பாங்கு இவரிடம் அதிகரித்து வருகிறது. பொதுவாக ஐ.எஸ் காவலர்கள் இருக்கிற இடமே தெரியாது. அவர்களது திறமையை தங்களது நுண்ணறிவு செயலில்தான் வெளிப்படுத்துவார்கள். ஐ.எஸ் போலீஸ் மற்றும் அதிகாரிகள் என்றாலே அது ஒரு தனி கெத்து. ஆனால் அந்த மாண்பை மறந்து ரொம்ப லோக்கலாய் நடந்துகொள்ளும் திருஞானம் மீது ஸ்ட்ரிக்ட் ஆபிசர் என பெயர் எடுத்துள்ள திருச்சி சிட்டி போலீஸ் கமிஷனர் ந.காமினி ஐ.பி.எஸ் நடவடிக்கை மேற்க்கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Comments are closed.