ஸ்ரீரங்கம் கிழக்கு வாசல் கோபுரத்தின் ஒரு பகுதி நேற்று நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவம் பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 2015 -ம் ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில்
கிழக்குவாசல் 6-வது கோபுரத்தின் ஒரு பகுதி நேற்று நள்ளிரவு இடிந்து விழுந்தது. இந்த கோபுரத்தை சீரமைக்க ரூ.98 லட்சம் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட இருந்த நிலையில் தற்போது இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த கோபுரம் விரைவில் சீரமைக்கப்படும். உத்திரங்கள் மற்றும் மரச் சட்டங்கள் மாற்றப்படும். சிற்ப சாஸ்திர வல்லுனர்கள், தொல்லியல் துறை அதிகாரிகள், ஸ்தபதிகள் கொண்ட குழு வழிகாட்டுதலின்படி பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். இந்த பணியானது 6 மாத காலத்தில் நிறைவடையும். இதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதால் , இந்த பகுதி சாலையை தற்காலிமாக மூட திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.