40 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்ட திருமண மண்டபம் மண்ணச்சநல்லூரின் புதிய அடையாளமான ஸ்ரீ சரவணபவ பேலஸ்! த.மா.கா.தலைவர் ஜி.கே வாசன் திறந்து வைத்தார் !
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் எல்.எஃப்.ரோட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ சரவணபவ பேலஸ் திருமண மண்டபம் மற்றும் மினி ஹாலின் திறப்பு விழா இன்று( ஜன .19) நடைபெற்றது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய திருமண மண்டபத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். விழாவிற்கு வந்திருந்தவர்களை சரவணபவ திருமண மண்டபத்தின் உரிமையாளர் இன்ஜினியர் எஸ். சரவணன் மற்றும் ஸ்ரீ சரவணபவ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முதல்வர் எஸ்.அனிதா சரவணன் ஆகியோர் வரவேற்றனர் இவ்விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தொழிற்சங்க ஆலோசகர் கே.எஸ்.ரவீந்திரன், செயற்குழு உறுப்பினர் கபிஸ்தலம் எஸ்.சுரேஷ், திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கே.வி.ஜி. ரவீந்திரன், திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் டி.குணா, லயன்ஸ் சங்கங்களின் திருச்சி மாவட்ட ஆளுநர் இன்ஜினியர் ஏ.சவரிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் மண்ணச்சநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். கதிரவன், தொழிலதிபர் ஏ.ஜோசப் லூயிஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளான செயற்குழு உறுப்பினர் ஆர். தர்மராஜ், திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் ஜி.சிவராமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் வி.மருதநாயகம், திருச்சி மாநகர் மாவட்ட பிரமுகர் இன்டர்நெட் ரவி, மண்டல மகளிர் அணி தலைவர் எம்.கிருஷ்ணவேணி மதிவாணன், மருத்துவர் அணி தலைவர் டாக்டர் லட்சுமி நந்தகுமார், மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர் எம்.அன்னபூரணி, மாநில செயலாளர் ஸ்ரீரங்கம் எஸ்.மதிவாணன், மாநில இணை செயலாளர்கள் எஸ்.ராஜு, ஐ.எஸ்.விஜய், ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி தலைவர் கே.டி.தனபால், மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர் சமுத்திரம் வி. கணேஷ், திருச்சி புறநகர் மாவட்ட சிறுபான்மை அணி தலைவர் முகமது உசேன், திருச்சி புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் எம்.பரஞ்சோதி, திருச்சி புறநகர் மாவட்ட அமமுக செயலாளர் தொட்டியம் எம். ராஜசேகரன், பாட்டாளி மக்கள் கட்சி எம்.பிரின்ஸ், திருச்சி புறநகர் மாவட்ட மதிமுக செயலாளர் டி.டி.சி சேரன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் எம். ஜெயசீலன், மண்ணச்சநல்லூர் ஒன்றிய தலைவர் ஸ்ரீதர், திருச்சி புறநகர் மாவட்ட பாஜக தலைவர் ஆர்.அஞ்சா நெஞ்சன், தேமுதிக பிரமுகர் கே.எஸ்.குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி அன்புசெல்வன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எஸ்.ராஜ்குமார், மண்ணச்சநல்லூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் ஏ.சிவசண்முகக்குமார், பார்க்கவன் தமிழ் முரசு மாத இதழ் ஆசிரியர் ராம ஸ்ரீதரன் மற்றும் தொழிலதிபர் டாக்டர் பார்க்கவன் பச்சமுத்து, எம்.மகேந்திரன், மண்ணச்சநல்லூர் மத்திய ஒன்றிய திமுக செயலாளர் சீனிவாசபெருமாள், கேபிஏ செந்தில் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்கள், அரசுத்துறை அதிகாரிகள், நண்பர்கள், உறவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை ஸ்ரீ சரவணபவ பேலஸ் மற்றும் சரவணபவ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
Comments are closed.