திருச்சி கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் பள்ளியில் விளையாட்டு தின விழா…* அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை நன்றியோடு நினைவுகூர்ந்து பேசிய திருச்சி மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி! (வீடியோ இணைப்பு)
திருச்சியில் உள்ள புகழ்பெற்ற கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில், பிரைமரி மாணவர்களுக்கான விளையாட்டு போட்டி விழா ஆகஸ்ட் 30ம் தேதி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி முதல்வர் அருட்சகோதரர் ஆர்.ஜேம்ஸ் பால்ராஜ் தலைமை தாங்கினார். விழாவில், சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட வன அலுவலர் எஸ்.கிருத்திகா ஐஎப்எஸ் மற்றும் திருச்சி மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் துணை மேயர் திவ்யா தனக்கோடி தனது அரசியல் குருவான பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியை நன்றியோடு நினைவு கூர்ந்து பேசினார். அவர் பேசுகையில்,
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பள்ளி ஒழுக்கத்திலும், படிப்பிலும், விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்கும் பள்ளி ஆகும். இந்த நேரத்தில் அவர்களுக்கு உறுதுணையாக இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை வாழ்த்துகிறேன். ஒரு ஆசிரியரால் தான் இன்றைய இளம் பிள்ளைகளை சரியான பாதையில் வழி நடத்திட முடியும். நான் இங்கு ஒன்றை மட்டும் நினைவு படுத்த விரும்புகிறேன். படிப்பு வெறும் மதிப்பெண்களை மட்டும் தருவதில்லை. மாறாக அது மரியாதை, ஒழுக்கம், தன்னம்பிக்கையை தருகிறது. மாணவர்களாகிய நீங்கள் தான் வருங்கால தேசத் தலைவர்கள். நான் ஒரே ஒரு முக்கியமான கருத்தை கூறுகிறேன், வெற்றி இறுதியானது அல்ல அதேபோல தோல்வி என்பது ஒரு முடிவல்ல.தொடர்ந்து சிந்தித்து முயற்சி செய்யுங்கள். வாய்ப்புகளை ஒருபோதும் விட்டு விடாதீர்கள். ஒருவேளை நான் அதை விட்டிருந்தேன் என்றால் நான் இங்கு உங்கள் முன் இல்லை. நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்லை என்றால் நான் இந்த இடத்திற்கு வந்திருக்க முடியாது. நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். பள்ளி நிர்வாகத்திற்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். விழாவில், பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் இருபால் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.
Comments are closed.