தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற வேண்டி திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள வையம்பட்டியில் தெற்கு ஒன்றிய தேமுதிகவின் சார்பில் மாவட்ட செயலாளர் ஆர்.பாரதிதாசன் வழிகாட்டுதலின்படி ஒன்றிய செயலாளர் வைரம் கே.குமார் தலைமையில் வைரம்பட்டி மாரியம்மன், காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடும், அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து கோட்டைக்கார முனியாண்டி சாமி கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடத்தினர். இதில் அவைத்தலைவர் ஸ்வீட் பாலு, பொருளாளர் முத்தமிழ்ச்செல்வன், துணைச் செயலாளர்கள் அன்பரசன், வி.எம்.மணி, கே.எஸ்.சாதிக்பாட்ஷா, மாவட்ட பிரதிநிதிகள் முருகேஷ், வேல்முருகன் மற்றும் பாலன், பி.சக்திவேல், வேதமுத்து, ரெட்ராஜா, கருமன், ராஜா, சக்திவேல், பழனிச்சாமி, மற்றொரு சக்திவேல், விஜி, திவாகர், சசிகுமார், ராஜா, முத்துக்குமார், சண்முகம் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.