Rock Fort Times
Online News

தீபாவளியையொட்டி சென்னை – நெல்லைக்கு சிறப்பு வந்தே பாரத் ரெயில்..

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை – நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 12-ம்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களில் வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வர். இதற்காக சிறப்பு பேருந்துகள் மற்றும் ரெயில்கள் இயக்கப்படும். அதன்படி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை – நெல்லை இடையே வந்தே பாரத் சிறப்பு ரெயில் இயக்கப்படவுள்ளது என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் 9ம் தேதி காலை 6 மணிக்கு சென்னையில் இருந்து நெல்லைக்கும், பிற்பகல் 3 மணிக்கு நெல்லையில் இருந்து சென்னைக்கும் ரெயில் இயக்கப்படவுள்ளது . இந்த ரெயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்