தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் புறக்காவல் நிலையம்…
மாநகர போலீஸ் கமிஷனர் காமினி திறந்துவைத்தாா்....
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கும் நிலையில் திருச்சி கடைவீதியில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக திருச்சி பெரிய கடை விதி, என்எஸ்பி ரோடு, நந்தி கோவில் தெரு, பர்மா பஜார் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் புத்தாடை மற்றுடம் பொருட்களை வாங்க தினமும் திரண்டு வருகிறார்கள். இந்நிலையில் பொதுமக்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு சம்பவத்தில் திருடர்கள் ஈடுபடுவது வழக்கம். இந்த நிலையில் கூட்ட நெரிசலில் திருடர்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபடுவதை தடுக்கவும், திருடர்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், பொது மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் வருடம் தோறும் திருச்சி மாநகர போலீஸ் சார்பில் புறக்காவல் நிலையம் அமைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு திருச்சி என்.எஸ்.பி ரோடு,நந்தி கோவில் தெரு சந்திப்பு, தெப்பக்குளம் பகுதிகளில் திருச்சி மாநகர போலீஸ் சார்பில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதனை திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் ந.காமினி ஐபிஎஸ் இன்று ( 02.11.2023 ) திறந்து வைத்து அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் கண்காணிப்பு கோபுரங்களை பார்வையிட்டு போலீசாருக்கு அறிவுரை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியின் போது மாநகர துணை கமிஷனர் அன்பு மற்றும் போக்குவரத்து உதவி கமிஷனர் நிக்சன் பாபு, திருவரங்கம் உதவி கமிஷனர் நிவேதா லட்சுமி, கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.