Rock Fort Times
Online News

திருச்சி 27, 28, 53 ஆகிய வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாம்கள்…!* பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார், மேயர் அன்பழகன்…!

தமிழ்நாடு அரசு சார்பில் தொடங்கப்பட்டுள்ள “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்களில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. அந்தவகையில் திருச்சி மாநகராட்சி வார்டு எண் 27, 28 மற்றும் 53 ஆகிய வார்டுகளில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் நடைபெற்றது. முகாமை மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் தொடங்கி வைத்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மண்டலக்குழு தலைவர்கள் துர்கா தேவி, விஜயலட்சுமி கண்ணன், உதவி ஆணையர்கள் சண்முகம், சென்னுகிருஷ்ணன் மற்றும் மேற்கு வட்டாட்சியர் பிரகாஷ், கவுன்சிலர்கள் கலைச்செல்வி ஜெகநாதன், பைஸ் அகமது, கமால் முஸ்தபா, மாவட்ட பிரதிநிதி மணிவண்ணபாரதி,வட்டச் செயலாளர் தனசேகர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டார்கள் .

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்