திருச்சி மாநகராட்சி 30-வது வார்டில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட சிறப்பு முகாம்… * பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார், * அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!
திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி, மாநகராட்சி மண்டலம் – 2, வார்டு எண் 30-க்கு உட்பட்ட பொதுமக்களுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் எடத்தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. முகாமிற்கு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி குத்துவிளக்கு ஏற்றி முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் அந்த வார்டு பகுதிக்கு உட்பட்ட பொதுமக்கள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை நேரில் தெரிவித்து பயன் பெற்றனர். முகாமில் தீர்வு காணப்பட்ட பயனாளிகளுக்கு
இலவச வீட்டு மனைப் பட்டா, சொத்துவரி பெயர் மாற்றம் போன்றவற்றை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார். இந்த முகாமில் மண்டலம் 3-ன் தலைவர் மு.மதிவாணன், மண்டலம் 2 ன் தலைவர் ஜெய நிர்மலா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலக்ஷ்மி, கிழக்குத் தாசில்தார் விக்னேஷ், இணை ஆணையர் சாலை தவளவன், சுகாதார அலுவலர்கள் பாலமுருகன், டேவிட் உட்பட அரசு அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed.