Rock Fort Times
Online News

புனித வெள்ளி, ஈஸ்டர் மற்றும் தொடர் விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்…- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் ஏற்பாடு!

புனித வெள்ளி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கவுள்ளது. இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாளை 17-04-2025 (வியாழக்கிழமை) 18-04-2025 (புனித வெள்ளி) 19-04-2025 (சனிக்கிழமை), மற்றும் 20-04-2025 (ஞாயிற்றுக்கிழமை) தொடர் விடுமுறையை முன்னிட்டு 17, 18 மற்றும் 19 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை. திருநெல்வேலி. நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 17-ம் தேதி 575 பேருந்துகளும், 18-ம் தேதி மற்றும் 19 ம் தேதி 450 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது. அதேபோல மாதாவரத்திலிருந்து 17 ம் தேதி முதல் முதல் 19 ம் தேதி வரை தலா 24 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 17 ம் தேதி 100 பேருந்துகளும், 18 மற்றும் 19ம் தேதிகளில் தலா 90 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 20 ம் தேதி 735 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. சிறப்பு பேருந்துகளில் பயணம் செய்ய விரும்புவோர் www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்