இந்திய அஞ்சல் துறை திருச்சிராப்பள்ளி கோட்டம் சார்பாக புனித ஜோசப் பள்ளியில் நாளை ( 24.11.2023 ) முதல் 10 நாட்களுக்கு நடைபெறும் புத்தக கண்காட்சியில் ஆதார் பதிவு, ஆதாா் திருத்தம் மற்றும் சிறுசேமிப்பு கணக்கு துவங்கும் முகாம் நடைபெற இருக்கிறது. ஆதார் புதிதாக எடுக்க கட்டணம் இல்லை. தேவையான ஆவணம், குழந்தையின் அசல் பிறப்பு சான்றிதழ் மற்றும் பெற்றோர் ஆதார் அட்டை, பெயர் மாற்றம், பிறந்த தேதி மாற்றம், முகவரி மாற்றம் செய்ய ரூ. 50 மற்றும் புகைப்படம் மாற்றம் செய்ய ரூ.100 வசூலிக்கப்படும்.
பெயர் மாற்றம் செய்ய பாஸ்போர்ட், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, புகைப்படத்துடன் திருமண சான்றிதழ், புகைப்படத்துடன் பென்ஷன் கார்டு, புகைப்படத்துடன் சாதி சான்றிதழ், பிறந்த தேதி மாற்றம் செய்ய பிறப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், மதிப்பெண் சான்றிதழ், முகவரி மாற்றம் செய்ய பாஸ்போர்ட், தபால் நிலைய அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை, ஆயுள் காப்பீட்டு சான்றிதழ், மூன்று மாதத்திற்கு உட்பட்ட மின்கட்டணம் பில், குடிநீர் வரி ரசீது ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்று அசல் ஆவணம் மாற்றம் ஏற்றாற்போல் கொண்டுவர வேண்டும். பொதுமக்கள் அனைவரும் இந்த சிறப்பு முகாமில் தங்கள் ஆதார் தேவைகள் மற்றும் சிறுசேமிப்பு கணக்கு துவங்கி பயன் பெறுமாறு திருச்சிராப்பள்ளி கோட்டம், முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், ஸ்ரீ.கிருஷ்ணமூர்த்தி தொிவித்துள்ளாா்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.