மதுரை கோட்ட ரெயில்வேக்கு உட்பட்ட பகுதிகளில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக தென்மாவட்ட ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பபட்டுள்ளது. அதன்படி, ஈரோடு-செங்கோட்டை ரெயில் (வ.எண்.16845) வருகிற 29-ந்தேதி வரை திண்டுக்கல் வரை மட்டும் இயக்கப்படும். ஆனால், வருகிற 9-ந்தேதி, 16, 23, 24 மற்றும் 30-ந் தேதிகளில் வழக்கம் போல இயக்கப்படும். மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.16846) நேற்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை செங்கோட்டையில் இருந்து திண்டுக்கல் வரை ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக, மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு ஒரு சிறப்புக்கட்டண ரெயில் (வ.எண்.06845) வருகிற 29-ந்தேதி வரை மாலை 6 மணிக்கு புறப்பட்டு இரவு 10 .30 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். இந்த ரெயில் இன்று (செவ்வாய்க்கிழமை), வருகிற 9-ந் தேதி, 16,23,24 மற்றும் 30-ந் தேதிகளில் வழக்கம் போல இயக்கப்படும். மறுமார்க்கத்தில் செங்கோட்டை- மதுரை சிறப்புக்கட்டண ரெயில் (வ.எண்.06846) வருகிற 30-ந் தேதி வரை அதாவது, நாளை (புதன்கிழமை), 10-ந்தேதி, 17, 24 மற்றும் 25-ந்தேதி ஆகிய நாட்களை தவிர பிற நாட்களில் அதிகாலை 5.10 மணிக்கு புறப்பட்டு காலை 9.30 மணிக்கு மதுரை வந்தடையும். ஆனால், இந்த சிறப்புக்கட்டண ரெயில் குறித்த தகவல்கள் ரெயில்வேயின் என்.டி.இ.எஸ். என்றழைக்கப்படும் தேசிய ரெயில் விசாரணை இணையதளத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
செங்கோட்டை-மயிலாடுதுறை ரெயில் (வ.எண்.16848) வருகிற 30-ந்தேதி வரை நாளை, வருகிற 10-ந்தேதி, 17-ந்தேதி, 24-ந் தேதி மற்றும் 25-ந் தேதிகளை தவிர பிற நாட்களில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் திருச்சி செல்லும். நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16352) வருகிற 4-ந் தேதி, 7-ந்தேதி, 11,14,18,21 மற்றும் 28-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் திருச்சி செல்லும். கன்னியாகுமரி-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.12666) வருகிற 6-ந்தேதி, 13,20 மற்றும் 27-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக மாற்றுப்பாதையில் திருச்சி செல்லும். குருவாயூர்-தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16128) வருகிற 28-ந் தேதி வரை அதாவது இன்று, 9-ந் தேதி, 15-ந் தேதி, 16, 22-ந் தேதி முதல் 24-ந் தேதி தவிர பிற நாட்களில் விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி வழியாக திருச்சி செல்லும். கன்னியாகுமரி ஐதராபாத் வாராந்திர சிறப்பு ரெயில் (வ.எண்.07229) வருகிற 5-ந் தேதி, 12-ந்தேதி, 19-ந்தேதி மற்றும் 26-ந்தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை வழியாக திருச்சி செல்லும். நாகர்கோவில்- மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16340) வருகிற 5-ந்தேதி, 8-ந்தேதி, 12,15,19,22,26 மற்றும் 29-ந் தேதிகளில் விருதுநகரில் இருந்து மானாமதுரை வழியாக திருச்சி செல்லும். விருதுநகரில் இருந்து மாற்றுப்பாதையில் செல்லும் ரெயில்களுக்கு அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ரெயில் போக்குவரத்து மாற்றத்தால் தென்மாவட்ட பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Comments are closed.