திருச்சி தெற்கு மாவட்ட காங்கிரஸ் சேவாதளம் செயற்குழு கூட்டம் திருச்சி அருணாசலம் மன்றத்தில் தெற்கு மாவட்ட சேவாதள தலைவர் லட்சுமி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் கோமதி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சேவாதள மாநில தலைவர் குங்பூ விஜயன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் வழக்கறிஞா் கோவிந்தராஜன், எல்.ரெக்ஸ், திருச்சி கலை, மாநில சேவாதள மகளிர் அணி தலைவி தங்கம், மாநில துணைத்தலைவர்கள் பாண்டு, செந்தில், மாநில செயலாளர் பன்னீர்செல்வம், தஞ்சை மாவட்ட தலைவர்கள் திருஞானம், தட்சிணாமூர்த்தி, மாநில செயலாளர் சுந்தர்ராஜன், அப்துல் குத்தூஸ், சேவாதளம் திருச்சி மாவட்ட தலைவர் முரளி , தெற்கு மாவட்டம் மகளிர் அணி தலைவி மேரி ஆஷா, மாவட்ட செயலாளர் எழிலரசி, மாவட்ட பொருளாளர் ஜோசப், திருவெறும்பூர் வட்டார தலைவர் ராணி, தெற்கு மாவட்ட செயலாளர் சுரேஷ், துவாக்குடி நகர தலைவர் சரண்யா, சேவாதளம் அகில இந்திய பயிற்சியாளர் டென்னிஸ் செல்வராஜ் , உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியில் தெற்கு மாவட்டம் சேவாதள சட்டமன்ற தலைவர் இன்ஜினீயர் பிரபு நன்றி கூறினார். கூட்டத்தில், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்குவதற்கு காங்கிரஸ் தீவிரமாக களப்பணியாற்றுவது, வெற்றிக்கனியை ராகுல் காந்தியின் காலடியில் சமர்பிக்க சபதம் ஏற்பது, திருச்சியில் சேவா தளத்தை பலப்படுத்தும் வகையில் பயிற்சி முகாம் நடத்துவது, அடுத்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி திருச்சியில் காங்கிரஸ் சேவாதள மாநாடு நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Prev Post

Comments are closed, but trackbacks and pingbacks are open.