Rock Fort Times
Online News

சோனியாகாந்தி பிறந்த நாள் விழா: இனிப்பு வழங்கி காங்கிரசார் கொண்டாட்டம் …

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சோனியாகாந்தி பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் வழக்கறிஞர் எம்.சரவணன் தலைமையில் திருச்சி மலைக்கோட்டை கோவிலில் சோனியா காந்தி பெயரில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சுப.சோமு, காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவரும், முன்னாள் கவுன்சிலருமான சிந்தாமணி செந்தில்நாதன், மாவட்ட துணைத் தலைவர் கள்ளத்தெரு குமார், தென்னூர் மெய்யநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும், சேவாதளம் மாவட்ட தலைவர் மலைக்கோட்டை முரளி, சிறுபான்மை பிரிவு பஜார் மைதீன், மாவட்ட பொதுச்செயலாளர் வெல்லமண்டி பாலசுப்பிரமணியன், மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர், மற்றும் முன்னாள் கவுன்சிலர் ஹேமா, ஸ்ரீரங்கம் கோட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிவாஜி சண்முகம், ஐ.என்.டி.யு.சி. தொழிற்சங்க துணைத் தலைவர் சந்துகடை சம்சுதீன், எஸ்.சி.எஸ் டி.பிரிவு தலைவர் பாக்யராஜ், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் ஜி.எம்.ஜி.மகேந்திரன், வர்த்தக பிரிவு மாவட்ட தலைவர் சிந்தாமணி கணேசன், கலை பிரிவு மாவட்ட தலைவர் ஸ்ரீராகவேந்திரா, மாநில வழக்கறிஞர்  பிரிவு செயலாளர் வழக்கறிஞா்  கிருபாகரன் மற்றும் வழக்கறிஞா்கள் ஆறுமுகம், வனஜா, தாஸ், தியாகராஜன், மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் சுப.சோமு சரவணன், மலைக்கோட்டை கோட்டம் வெங்கடேசன், மெய்யநாதன், வழக்கறிஞா்  சுப்பிரமணி, மகளிர் அணி அஞ்சு, ராஜீவ்காந்தி சண்முகம், முன்னாள் கவுன்சிலர் நாகமங்கலம் சீனிவாசன், ஐடி பிரிவு விஜி, மார்க்கெட் மாரியப்பன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்