விரைவில் துணை முதலமைச்சராகப்போகிறார் என்கிற எதிர்பார்ப்பில் உள்ள தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இரண்டு நாட்கள் அரசு முறை பயணமாக திருச்சிக்கு வந்துள்ளார்.இவரை வரவேற்று, லால்குடி எம்.எல்.ஏ சௌந்தரபாண்டியன் இன்று நாளிதழ்களில் விளம்பரம் கொடுத்துள்ளார். அதில், அமைச்சர் கே.என்.நேருவின் புகைப்படமோ, அவரது தொகுதிக்குட்பட்ட திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பெயரோ, புகைப்படமோ இடம்பெறவில்லை.
இதேபோல் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளராக அறியப்படும் ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ பழனியாண்டி கொடுத்துள்ள நாளிதழ் விளம்பரங்களில்
எந்நாளும் இல்லாத திருநாளாக, அமைச்சர் கே.என்.நேருவின் படத்திற்கு இணையாக கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் புகைப்படமும், அமைச்சர் நேருவின் புகைப்படத்திற்கு இணையான சைஸில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகம் முழுக்க நடக்கும் உட்கட்சி பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் பொறுப்பில் இருக்கும் திமுக முதன்மைச் செயலாளரும், அமைச்சருமான கே.என் நேருவின் சொந்த மாவட்டமான திருச்சியிலேயே, இவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் பழனியாண்டி மற்றும் சௌந்தரபாண்டியன் ஆகியோர் தனிக்காட்டு ராஜாக்களாக செயல்படுவதுதான் மலைக்கோட்டை மாவட்ட அரசியலில் தற்போது “ஹாட் டாப்பிக்”காக மாறியுள்ளது. — ப. பாஸ்கர்
Comments are closed.