Rock Fort Times
Online News

திருமாவளவன் குறித்து அவதூறு கருத்து: திருச்சி சூர்யாவை கைது செய்யக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் விசிகவினர் புகார்…!

திருச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேற்கு மாநகர் மாவட்ட செயலாளர் புல்லட்லாரன்ஸ் தலைமையில் கட்சி நிர்வாகிகள் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினியிடம் புகார் மனு அளித்தனர். அந்தமனுவில், MGR TV என்ற சமூக வலைதளத்தில் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் மகனும், பி.ஜே.பி கட்சியை சார்ந்த திருச்சி சூர்யா விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் சாதியை பற்றி இழிவாகவும், அரசியல் நாகரீகம் இன்றி சில தவறான கருத்துக்களையும், சாதி கலவரத்தை தூண்டும் வகையிலும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேலும், தொடர்ச்சியாக இதுபோன்ற பதிவுகளை சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு செய்து எங்கள் கட்சியினருக்கும், மற்றவர்களுக்கும் பகைமை ஏற்படுத்தி கலவரத்தை தூண்டி பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். ஆகவே, திருச்சி சூர்யாவை கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர். அப்போது திருச்சி – கரூர் மண்டல செயலாளர் தமிழாதன், மாவட்டச் செயலாளர்கள் கனியமுதன், முசிறி வழக்கறிஞர் கலைச்செல்வன், குருஅன்புச்செல்வன், இளம் சிறுத்தை பாசறை மாநில துணைச் செயலாளர் அரசு, மாநில பொறியாளர் அணியின் துணைச்செயலாளர் சந்திரசேகரன், நிர்வாகிகள் சிந்தை சரவணன், வழக்கறிஞர்கள் பழனியப்பன், தீனா, ஏர்போர்ட் மாரியப்பன், பெரியசாமி, மகளிர் விடுதலை இயக்க நிர்வாகி கஸ்தூரி உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

🔴LIVE : திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பணிகள் ஆய்வு அமைச்சர் கே.என். நேரு பேட்டி

1 of 916

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்