திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளியில் பயிலும் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் 6 பேர் வகுப்பறையில் அமர்ந்து கடந்த வாரம் மது அருந்துவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த சம்பவம் குறித்து 6 மாணவிகளின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து அந்த 6 பேரும் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளனர். மேலும், அந்த மாணவிகளுக்கு எவ்வாறு மது கிடைத்தது? வகுப்பறையில் மாணவிகள் மது அருந்தும் போது ஆசிரியர் யாரும் இல்லையா? என்பது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தலைமையில் விரிவான விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்திலேயே மாணவிகள் மது அருந்திய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.