Rock Fort Times
Online News

திருச்சி, ஸ்ரீரங்கம் பகுதியில் பெண்ணிடம் ஆறரை பவுன் சங்கிலி பறிப்பு- * தப்பி ஓடிய வாலிபரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்..!

திருச்சி, ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம், கல்மேட்டு தெருவை சேர்ந்தவர் பவுன்ராஜ். இவரது மனைவி முத்துச்செல்வி (52). இவர் ஸ்ரீரங்கம் பெரியார் நகர் ஓம் சக்தி கோவில் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் முத்துச்செல்வி கழுத்தில் அணிந்திருந்த ஆறரை பவுன் தங்கச்சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓடினார். அப்போது முத்துச்செல்வி திருடன் ….திருடன் ….. என கூச்சலிட்டார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த வாலிபர் கரூர் மாவட்டம், குளித்தலை ஆர்.டி.மலை தெற்கு தெருவை சேர்ந்த பிச்சைமுத்து என்பவரது மகன் சுகுமார் (27) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஆறரை பவுன் தங்க சங்கிலியை மீட்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்