சென்னை தென்மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக விஞ்ஞானி சிவானந்த தாமோதர பை இன்று (மார்ச் 19) பொறுப்பேற்றுக் கொண்டார். 1992 ஆம் ஆண்டு வானிலை ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாக இணைந்த இவர், சுமார் 34 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்டவர். கடந்த ஒரு ஆண்டாக இந்த மையத்தின் தலைவராக கூடுதல் பொறுப்பு வகித்த விஞ்ஞானி அமுதா, அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், புதிய தலைவராக சிவானந்த தாமோதர பை நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பு, தில்லியில் உள்ள புவி அறிவியல் அமைச்சகத்தில் திட்ட இயக்குநராகவும், இந்திய வானிலை துறையின் வேளாண் வானிலை ஆலோசனைப் பிரிவின் தலைவராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.

Comments are closed.