சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்- பெரம்பலூர் கலெக்டர், எஸ்.பி.வடம் பிடித்தனர்…! (வீடியோ இணைப்பு)
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் சித்திரைத் திருவிழாவையொட்டி கடந்த 7ம்தேதி பூச்சொரிதல் விழா நடந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 14ம் தேதி பெரியசாமி மலையில் செல்லியம்மனுக்கும், மதுரகாளியம்மனுக்கு ம் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து நாள்தோறும் இரவு யானை, குதிரை உள்ளிட்ட அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி இன்று(23-05-2024) நடைபெற்றது. பெரம்பலூர் மாவட்ட ஆட்சி தலைவர் கற்பகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யமளாதேவி, மாவட்ட அறங்காலவர் குழு தலைவர் கலியபெருமாள் மற்றும் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்த னர். சிறுவாச்சூர் கிராமத்தின் பிரதான வீதிகள் வழியே சென்ற தேர் மீண்டும் நிலையை அடைந்தது. இதில் டிஆர்ஓ வடிவேல்பிரபு, சப்- கலெக்டர் கோகுல், டிஎஸ்பி பழனிச்சாமி, கோவில் செயல் அலுவலர் அசனாம்பிகை, தாசில்தார் சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் இமயவரம்பன், சிறுவாச்சூர் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் மற்றும் பெரம்பலூர், அரியலூர், துறையூர், திருச்சி, கடலூர், நாமக்கல், சென்னை, கடலூர் உள்பட பல்வேறு நகரங்களிலிருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மதுரகாளியம்மன் கோவில் வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் மட்டும் காலை 6.30 மணி முதல் இரவு 9 மணி நடை திறந்திருக்கும். சித்திரை மாத அமாவாசையன்று மதுரகாளியம்மனுக்கு பூச்சொரிதல் விழாவும், பின்னர் அம்மனுக்கு காப்பு கட்டி திருவிழாவும் தொடங்கும். 8-ம் நாள் திருவிழாவான செவ்வாய் அன்று மாலை சுற்று வட்டார மக்கள் பெரிய சாமி கோயில் மலையடிவாரத்தில் கூடுவர்.

அன்று இரவு சிறப்பு பூஜையும், மறுநாள் அதிகாலையில் கிடா வெட்டும் நடைபெறும். மலைக்கோயில் பூஜைகள் அதோடு நிறைவு பெறும். புதன்கிழமை அன்று பக்தர்கள் மதுரகாளி வாசலில் பொங்கல் வைத்து நேர்த்திக் கடன் செலுத்துவர். வியாழனன்று செல்லியம்மன், பெரியசாமி, மதுரகாளி உள்ளிட்ட தெய்வங்களின் தேர்பவனியும், நாளை வெள்ளிக்கிழமையன்று ஊஞ்சல் உற்சவமும் நடைபெறும். சனிக்கிழமை நடைபெறும் மஞ்சள் நீராட்டுடன் திருவிழா நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.