தமிழ்நாடு காவல்துறையில், கொலை-கொள்ளை வழக்குகளில் துப்பு துலக்க மோப்பநாய் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தநிலையில் மோப்பநாய் படை பிரிவிற்கு புதிதாக 35 மோப்ப நாய்கள் வாங்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி மாநகர காவல்துறைக்கு ஒரு மோப்ப நாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த மோப்ப நாய்க்கு “சிலம்பு” என்று பெயரிடப்பட்டு உள்ளது. அந்த மோப்பநாய் இன்று( மார்ச் 22) திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, முன்னிலையில் திருச்சி மாநகர மோப்ப நாய் படை பிரிவில் சேர்க்கப்பட்டது. இந்த மோப்ப நாய்க்கு வருகின்ற ஜூன் மாதம் முதல் நவம்பர் வரை கோயம்புத்தூர் பயிற்சி மையத்தில் 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி முடித்த பின்பு திருச்சி மாநகரில் மோப்பநாய் படைபிரிவில் சேர்க்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.