திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத தர்பாரண்யேஸ்வரர் கோயிலில் இன்று(மார்ச் 6) சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது. ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர சனி கிரகம், இரண்டரை முதல் இரண்டே முக்கால் ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறது. இந்த தலத்தில் ஸ்ரீ சனீஸ்வரபகவான், அபய முத்திரையுடன், கிழக்கு நோக்கிய பார்வையில், அனுகிரக மூர்த்தியாக காட்சியளிக்கிறார். இந்த கோயிலில் அனுக்கிரக மூர்த்தியாக உள்ள சனிபகவானுக்கு சனிப்பெயர்ச்சி விழா நாளில் விமரிசையான அபிஷேகம், அர்ச்சனை, தீபாராதனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இன்று கும்ப ராசியிலிருந்து மீன ராசிக்கு காலை 8.24 மணிக்கு பிரவேசிக்கும் நிகழ்வை குறிக்கும் வகையில், மங்கள வாத்தியங்கள் இசையுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வசதியாக கட்டணமில்லா தரிசனம் மற்றும் ரூ.300, ரூ.600, ரூ.1,000 ஆகிய வரிசைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.

Comments are closed.