Rock Fort Times
Online News

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: காவல் இணை ஆணையர் சஸ்பெண்ட்…!

பெண் காவலர் அளித்த பாலியல் புகார் அடிப்படையில், சென்னை மாநகர காவல் வடக்கு மண்டல போக்குவரத்து பிரிவு இணை ஆணையர் மகேஷ்குமார் ஐபிஎஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.சென்னை மாநகர காவல் போக்குவரத்து பிரிவில் வடக்கு மண்டல இணை ஆணையராக டிஐஜி அந்தஸ்தில் பணியாற்றி வருபவர் மகேஷ்குமார் ஐபிஎஸ். இவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்துவதாக போக்குவரத்து பிரிவில் பணியாற்றும் பெண் போலீஸ் ஒருவர் டிஜிபி இடம் புகார் அளித்தார். அதனடிப்படையில், மூத்த ஐபிஎஸ் அதிகாரி சீமா அகர்வால் தலைமையிலான விசாகா குழு விசாரணை நடத்தியது. இந்தக் குழு விசாரணையில், புகாரில் அடிப்படை முகாந்திரம் இருப்பது கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்