தூத்துக்குடி, எட்டயபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். சென்னை கொளத்தூரை சேர்ந்த பாஸ்கரன்–வனிதா தம்பதியினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என 6 பேர் இரண்டு நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தனர். கோவிலில் தரிசனம் முடித்து விட்டு இன்று (ஏப்.13) மதியம் அவர்கள் சென்னைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எட்டயபுரம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் வேகமாக மோதியது. இந்த விபத்தில் சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பாஸ்கரன், வனிதா, பழனி, வசந்தி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பலத்த காயமடைந்த சந்தியா மற்றும் பிரதீப் குமார் ஆகிய இரண்டு குழந்தைகளும் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து எட்டயபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவில்பட்டி வட்டார போக்குவரத்து ஆய்வாளரும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்த துயரமான விபத்து அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.