கரூர், வேலுசாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். கூட்ட நெரிசலுக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்தநிலையில், விஜய் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 முதல் ரூ.1 லட்சம் வரை வழங்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, காயமடைந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்ற முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அவர்களிடம் நலம் விசாரித்து, தமிழ்நாடு அரசு அறிவித்த நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினார். கூட்ட நெரிசலில் 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் முதற்கட்டமாக 45 பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வின்போது கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உடனிருந்தார்.
Comments are closed.