Rock Fort Times
Online News

சேந்தமங்கலம் திமுக எம்எல்ஏ பொன்னுசாமி காலமானார்!

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் சட்டசபை தொகுதி திமுக எம்எல்ஏ பொன்னுசாமி (வயது 74). இவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சைக்காக நாமக்கல் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவர் இன்று(23-10-2025) சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். இவர் 2016ம் ஆண்டு திமுக சார்பில் சேந்தமங்கலம் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில், இதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆரம்பத்தில் அதிமுகவில் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய பொன்னுசாமி, பிறகு திமுகவில் இணைந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பொன்னுசாமி மறைவால் சேந்தமங்கலம் தொகுதி காலியாகியுள்ளது. எனினும், தமிழகத்தில் சட்ட சபை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருக்காது என்றே தெரிகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்