திருவெறும்பூரில் பரபரப்பு சம்பவம்: மனைவி மீது பெட்ரோலை ஊற்றி எரிக்க முயன்ற கணவன்: பலத்த தீக்காயத்துடன் 4 பேர் மருத்துவமனையில் அனுமதி…!
திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள பூலாங்குடி பழங்கனாங்குடி சாலை ஹேப்பி நகரை சேர்ந்தவர் ராஜேந்திர பிரசாத் (56). விவசாயி. இவரது மனைவி ஹேமாபிந்து (50). இவர்களது மகன்கள் குணசேகர் ( 20) குருசாமி (20). இவர்கள் இருவரும் இன்ஜினியரிங் படித்து வருகின்றனர். ஒரு மகள் ஹர்சினி மருத்துவராக பணியாற்றி வருகிறார். மற்றொரு மகள் உமா சங்கரி மருத்துவம் படித்து வருகிறார். இவர்கள் அனைவரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் ஹேமா பிந்துவிற்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருந்துள்ளது. இதனால் அடிக்கடி வீட்டில் உள்ள பூஜை அறையில் அமர்ந்து சாமி கும்பிடுவது வழக்கமாக கொண்டிருந்தார். இது ராஜேந்திரபிரசாத்திற்கு பிடிக்கவில்லை. இந்தநிலையில் நேற்று இரவு 11 மணி அளவில் ஹேமா பிந்து சாமி கும்பிட்டுக் கொண்டு இருந்ததாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திர பிரசாத் வீட்டில் வாகனத்திற்காக வைத்திருந்த பெட்ரோலை எடுத்து அவர் மீது வீசி உள்ளார். அப்போது சாமி அறையில் எரிந்து கொண்டிருந்த தீபத்தில் பெட்ரோல் பட்டு அவர் மீது தீ பிடித்தது. இதில் ஹேமா பிந்து மீது தீ பற்றியது. அவரது அலறல் சத்தம் கேட்டு மகன்கள் குணசேகர், குருசாமி ஆகியோர் பூஜை அறைக்கு ஓடிவந்து தாயை காப்பாற்ற முயன்றனர். அப்போது அவர்கள் மீதும் தீப்பற்றியது. மூன்று பேரையும் காப்பாற்ற முயன்ற ராஜேந்திர பிரசாத் உடலிலும் தீப்பிடித்தது. உடனே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைத்து அவர்கள் நான்கு பேரையும் திருச்சி அரசு மருத்துவமனையில்சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களில் ஹேமா பிந்துவும், ராஜேந்திர பிரசாத்தும் ஆபத்தான நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நவல்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் திருவெறும்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments are closed.