Rock Fort Times
Online News

டெல்லியில் அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?…!

அதிமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன், அதிமுகவில் பிரிந்து சென்றவர்களை 10 நாட்களுக்குள் ஒன்றிணைக்க வேண்டும், இல்லை என்றால் வருகிற சட்டமன்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற வாய்ப்பில்லை என கருத்து தெரிவித்தார். அவரது கோரிக்கையை ஏற்காத கட்சித் தலைமை, அவரிடம் இருந்து அமைப்புச் செயலாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளை பறித்தது. மேலும், அவரது ஆதரவாளர்களின் பதவிகளையும் கட்சி தலைமை பறித்தது. இந்நிலையில், கே.ஏ.செங்கோட்டையன் கோவையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

ஹரித்துவாரில் உள்ள ராமர் கோயிலுக்குச் செல்கிறேன். மனம் சரியில்லாததால் கோயிலுக்குச் செல்வதற்காக வந்திருக்கிறேன். பாஜக தலைவர்கள் யாரையும் சந்திக்க செல்லவில்லை. கோயிலுக்குச் சென்று விட்டு வந்தால் மனம் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆக இருக்கும். பாஜக தலைவர்களை சந்திக்க நான் ஹரித்துவார் செல்லவில்லை. ராமரை சந்திக்க செல்கிறேன். நாளை பிற்பகல் திரும்புகிறேன் என்று தெரிவித்தார். இந்நிலையில் அவர் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்