Rock Fort Times
Online News

த.வெ.க.வில் செங்கோட்டையன்- அதிமுக ரியாக்க்ஷன் என்ன?

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இன்று(27-11-2025) தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜயை சந்தித்து அந்த கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். அவர்களுடன் அவரது ஆதரவாளர்களும் இணைந்தனர். அவருக்கு த.வெ.க.வில் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு அமைப்பு பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்தது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு அவர், “செங்கோட்டையன் அதிமுக-வில் இல்லை. அதனால் பதில் சொல்ல அவசியம் இல்லை. செங்கோட்டையன் குறித்து என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்.. அவரை கேளுங்கள் என கூறிவிட்டு சென்றார். அதிமுக மூத்த தலைவர் செம்மலை: பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது. கட்சியை விட்டு வெளியேறுவதற்கு அவருக்கு ஒரு காரணம் தேவைப்பட்டிருக்கிறது. ஜெயலலிதா உயிருடன் இருந்தபோதே செங்கோட்டையன் இதுபோன்ற முயற்சியை எடுத்தவர்தான். தாயை பழித்தவனும், தலைமையை மதிக்காதவனும் ஒன்றே. எங்கள் பொதுச்செயலாளரை பொறுத்தவரை இந்த விஷயத்தில் அவசரப்படவில்லை. மிகவும் பொறுமை காத்தார். செங்கோட்டையனின் இந்த நடவடிக்கையால் அதிமுகவில் எந்த பாதிப்பும் ஏற்படாது. செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கை முடிந்து போன ஒன்றாகி விட்டது என்று தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்