அமைதியாக இருக்கும் தமிழகத்தில் வன்முறையை கிளப்ப பார்க்கிறார் சீமான்- அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
திருச்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழியிடம் செய்தியாளர்கள், ஈரோடு பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியாரிடம் வெங்காயம் தான் உள்ளது, தலைவர் பிரபாகரனிடம் வெடிகுண்டு உள்ளது. நீ வெங்காயத்தை வீசினால் நான் வெடிகுண்டை வீசுவேன் என பேசி உள்ளாரே என்று கேட்டதற்கு, அமைதியாக இருக்கும் தமிழகத்தில் சீமான் வன்முறையை கிளப்ப பார்க்கிறார். கருத்தியல் ரீதியாக மோதிப் பார்க்க வேண்டும். சமத்துவம், சமூகநீதி சார்ந்து நிறைய திட்டங்கள் கொண்டு வருகிறோம். கொஞ்சம் கொஞ்சமாக மாறி வளர்ச்சி பாதையில் தமிழ்நாடு போய்க் கொண்டிருக்கிறது. மற்ற மாநிலங்களை தமிழ்நாட்டுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்றார். உத்தரகாண்ட் மாநிலத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுவது குறித்த கேள்விக்கு … இதுகுறித்து தமிழக முதல்வர் தெரிவிப்பார். டங்ஸ்டன் திட்டத்தை நிறுத்த வேண்டுமென தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டங்ஸ்டன் திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம். அப்படி வந்தது என்றால் இந்த பொறுப்பில் இருக்க மாட்டேன் என முதல்வர் உறுதிபட தெரிவித்தார். தற்போது இதற்கு நாங்கள் தான் காரணம் என யார் யாரோ உரிமை கொண்டாடுகிறார்கள் என்றார்.
Comments are closed.