நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நாளை காலை திருச்சி வருகிறார். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கில்ஆஜராக உள்ளார். பின்னர் மாலையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அப்போது,திருச்சியில் உள்ள அகதிகளுக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து முடித்துள்ளவர்களை விடுவிக்க வலியுறுத்தப்படவுள்ளது.