Rock Fort Times
Online News

திருச்சி கிழக்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி செயல் வீரர்கள் கூட்டம்… அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு!

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிகட்சிகளின் செயல் வீரர்கள்
கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் தலைமை தாங்கினார். திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளருமான அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வரவேற்புரை ஆற்றினார். கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு பங்கேற்று பேசுகையில், தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் இனிகோ இருதயராஜை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணி ஆற்ற வேண்டும்
என்று கேட்டுக்கொண்டார்.தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ ஆகியோர் பேசினர். கூட்டத்தில், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்