Rock Fort Times
Online News

பூச்சொரிதல் விழாவுக்கு வசூலித்த பணத்தை பிரிப்பதில் மோதல்: ஸ்ரீரங்கத்தில் 3 பேருக்கு அரிவாள் வெட்டு!

சமயபுரம் பூச்சொரிதல் விழாவுக்கு ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களிடம் பணம் வசூல் செய்தனர். பூச்சொரிதல் விழாவும் முடிந்தது .அந்தப் பணத்தை பிரிப்பதில் அவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து திருச்சி அம்மாமண்டபம் புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த கொக்கரக்கோ என்கிற பிரசாந்த் வயது 21 மற்றும் அவரது நண்பர்கள் ஹரி விஜய், அசோக், வெங்கடேசன் ஆகியோர் பணத்தை தர மறுத்தனர். இதனால் ஏற்பட்ட மோதலில் ஸ்ரீரங்கம் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் 23 அதே பகுதியைச் சேர்ந்த மாதவன் 20 ஆகிய மூன்று பேரை அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது. அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர் .அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Comment
  1. mitolyn says

    **mitolyn**

    Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்