திருச்சி சோமரசம்பேட்டை அருகே உள்ள பள்ளக்காடு பகுதியில் இருந்து தனியார் பள்ளிக்கு 30 மாணவர்களுடன் வேன் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. சோமரசம்பேட்டை அருகே வந்த போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க டிரைவர் வேனை திருப்பியதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மாணவர்கள் இருவர் காயமடைந்தனர். மற்ற மாணவர்கள் லேசான காயம் அடைந்தனர். காயம் அடைந்த 2 மாணவர்களும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து சோமரசம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.