திருச்சியில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து! – 22 மாணவ மாணவிகள் உயிர் தப்பினர்.! அரசு மருத்துவமனையில் அனுமதி.!

திருச்சி நவல்பட்டு துப்பாக்கி தொழிற்சாலை கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு 22 மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் இன்று காலை சென்று கொண்டிருந்தது. வேன் மாத்தூர் அடுத்துள்ள குமாரமங்கலம் பகுதியில் சென்றபோது நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்தது. அந்த விபத்தில் வேனில் பயணித்த மாணவ மாணவிகள் 22 பேரும் காயம் அடைந்தனர். விபத்தைக் கண்ட அப்பகுதி மக்கள் அவர்களைமீட்டு ஆம்புலன்ஸ் வரவழைத்து திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வழக்கமாக வரும் ஓட்டுநர் இன்று விடுப்பு எடுத்த காரணத்தால் மாற்று ஓட்டுநர் அந்த வேனை ஓட்டி வந்துள்ளதாகவும், குறுகலான பகுதியில் வேகமாக வேனை இயக்கியதால் அங்கிருந்த பள்ளத்தில் அது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து குறித்து மாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

**mitolyn official**
Mitolyn is a carefully developed, plant-based formula created to help support metabolic efficiency and encourage healthy, lasting weight management.