Rock Fort Times
Online News

சாலை விபத்தில் பள்ளி மாணவர் பலி…

திருச்சி நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தெய்வீக ராஜ். விவசாயி. இவரது மகன் சச்சின் ஜோசர் (வயது 14). இவர், நாகமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் மின்சார இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு செல்வது வழக்கம் என்று கூறப்படுகிறது. வழக்கம்போல் நேற்று ( 07.11.2023 )  பள்ளிக்குச் சென்ற இவர், பள்ளி முடிந்தவுடன் டியூஷன் சென்று விட்டு தீரன் மாநகரில் இருந்து நவலூர்குட்டப்பட்டு செல்லும் சாலையில் கலிங்கிபட்டி என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்தார். அப்போது எதிரே மணப்பாறையில் இருந்து நாகமங்கலம் நோக்கி வந்த லோடு ஆட்டோ மாணவர் மீது மோதியது. இதில் சச்சின் ஜோசர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மணிகண்டம்  போலீசார் வழக்கு பதிவு செய்து லோடு ஆட்டோ டிரைவர் மணப்பாறை பெரியப்பட்டியை சேர்ந்த முத்துவேல் (42) என்பவரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்