Rock Fort Times
Online News

எஸ்.பி.எஸ் ஹோட்டல் புதிய கிளை திருச்சி கே.கே நகரில் உதயம்..!- வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் வீ.கோவிந்தராஜுலு திறந்து வைத்தார்…

திருச்சி, கே.கே நகர், மகாத்மா காந்தி தெருவில் எஸ்.பி.எஸ் ஹோட்டல் திறப்பு விழா இன்று ( பிப்.7 ) நடைபெற்றது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச்செயலாளர் டாக்டர் வீ. கோவிந்தராஜுலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதிய உணவகத்தை திறந்து வைத்தார்.விழாவிற்கு வந்திருந்தவர்களை இதன் உரிமையாளர் ஏ.முத்துசாமி வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் ராக்போர்ட் டைம்ஸ் தமிழ் வார இதழ் முதன்மை செய்தி ஆசிரியர் எஸ்.ஆர் லெக்ஷ்மி நாராயணன், வி.எல். வித்யா மஹால் மேனேஜிங் டைரக்டர் எம்.நாகராஜன்,தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகளான எஸ்.ஆர்.வி கண்ணன், பரணிபவன் ஏ.ஆறுமுகசாமி,திருச்சி வயலூர் ரோடு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள், வாடிக்கையாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். திறப்பு விழாவிற்கான ஏற்பாடுகளை எஸ்.பி.எஸ் ஹோட்டல் நிர்வாகத்தினர் மற்றும் ஊழியர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்