Rock Fort Times
Online News

குஜராத்தில் சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி: துவாரகா -மதுரை இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

மதுரை மற்றும் திருச்சி உறையூர் பகுதிகளில் சௌராஷ்டிரா இன மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் துவாரகா பகுதியில் சௌராஷ்டிரா மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர் அங்கு சௌராஷ்ட்ரா தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. சௌராஷ்டிரா-தமிழ் சங்கமம் நிகழ்ச்சியையொட்டி குஜராத் மாநிலம் துவாரகா-மதுரை இடையே சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. நாளை (19.04.2023 ) முதல் 29.04.2023ந்தேதி வரை 11 நாட்கள் சிறப்பு ரெயில் (எண்.06302) இயக்கப்படுகிறது. தினமும் இரவு 10.40 மணிக்கு துவாரகா ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 4-வது நாள் காலை 10.30 மணிக்கு மதுரை வந்தடையும். துவாரகாவில் புறப்படும் இந்த ரெயில் ராஜ்கோட், சுரேந்திர நகர், அகமதாபாத், லதோரா, சூரத், நந்தர்பர், ஜல்கான், அகோலா, நந்தேட், காச்சிகுடா, ரேனிகுண்டா, சென்னை எழும்பூர், தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரை வந்து செல்லும். இத்தகவலை ரயில்வே செய்தி குறிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளது.

          

Leave A Reply

Your email address will not be published.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்