உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் நேற்று இரவு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக அரசியல் நிலவரம் குறித்து அமித் ஷா கேட்டறிந்தார். 2026-ம் ஆண்டு தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி பெறும். திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக வலிமையான கூட்டணியை அமைத்துள்ளோம். பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று திமுக வாக்குறுதி கொடுத்தது. அவர்கள் போராட்டத்தை கையில் எடுத்தவுடன் புதிதாக ஒரு ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்து அரசு ஊழியர்களை ஏமாற்றியுள்ளது. உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். சசிகலாவுக்கு அதிமுகவில் எப்போதுமே இடம் இல்லை. டிடிவி தினகரன், ஓ பன்னீர் செல்வம் மீண்டும் அதிமுகவில் சேர்க்க வாய்ப்பு இல்லை. அமித்ஷா வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழகம் வந்ததால் அவரை தமிழகம் வந்தபோது சந்திக்கவில்லை. கூட்டணி அமைப்பது தொடர்பாக பிற கட்சிகளுடன் பேசி வருகிறோம்” இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.