திருச்சி மாவட்டம், துறையூரில் மணல் லாரி மற்றும் ஜேசிபி இயந்திர உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்…!
திருச்சி மாவட்டம், துறையூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஜேசிபி இயந்திர உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும், டோல்கேட் கட்டணங்களை திரும்ப வேண்டும், ஜேசிபி இயந்திர உதிரி பாகங்களின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும், லாரி, ஜேசிபி வாடகையை உயர்த்த வேண்டும், மூடப்பட்டுள்ள அரசு மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி துறையூர் லாரி உரிமையாளர்கள் மற்றும் ஜேசிபி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் மோகன்தாஸ் தலைமையில் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில், துறையூர் மணல் லாரி டிப்பர் உரிமையாளர் சங்க செயலாளர் பிரியா ரவி, பொருளாளர் ராஜா மற்றும் டிப்பர் லாரி ஓட்டுனர்கள், ஜேசிபி ஆபரேட்டர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன் காரணமாக துறையூர் பகுதியில் மணல் லாரிகள் மற்றும் ஜேசிபி இயந்திரங்கள் இயக்கப்படவில்லை.அவை வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
Comments are closed.