அம்மன் தலங்களில் புகழ்பெற்ற ஸ்தலமாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் சித்திரை தேர் திருவிழா வரும் 18ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதற்காக போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி மதுரை மார்க்கத்தில் இருந்து சென்னை செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் வளநாடு – மணப்பாறை- தோகைமலை – குளித்தலை – முசிறி- துறையூர் – பெரம்பலூர் வழியாகவும் , திண்டுக்கல் மார்க்கத்திலிருந்து சென்னை செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மணப்பாறை – தோகைமலை- குளித்தலை -முசிறி -துறையூர் – பெரம்பலூர் வழியாகவும் சென்னை செல்ல வேண்டும். முசிறி மற்றும் சேலத்தில் இருந்து திருச்சி வரும் கனரக சரக்கு வாகனங்கள் முசிறி -குளித்தலை – ஜீயபுரம் –
வழியாக திருச்சி செல்ல வேண்டும். சென்னை மார்க்கத்தில் இருந்து திருச்சி வரும் கனரக சரக்கு வாகனங்கள் சிறுகனூர் – தச்சங்குறிச்சி – பூவாளூர் பனமங்கலம் சந்திப்பு வழியாக சென்னை -திருச்சி தேசிய நெடுஞ்சாலை வழியாக திருச்சி செல்ல வேண்டும். சிதம்பரம் அரியலூர் மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் பெருவளநல்லூரில் இருந்து குமுளுர் -தச்சங்குறிச்சி வழியாக சிறுகனூர் சென்று பெரம்பலூர் மார்க்கமாக சென்னை செல்ல வேண்டும். இத்தகவலை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
